பிந்திய செய்திகள்

இலங்கையில் மின் கட்டணமும் பாரியளவில் அதிகரிப்பு

இலங்கையில் மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts