பிந்திய செய்திகள்

இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி பெண் ஒருவர் மரணம்

இன்று நண்பகல் யாழில்லிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெண் உடுத்துறை வடக்கு தாளையாடியை சேர்ந்த ஞானசீலன் தவமலர் வயது 60 என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts