பிந்திய செய்திகள்

நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்த விசேட உத்தரவு!!

இலங்கையில் இன்று முதல் அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வழங்குநர்கள், தங்களின் கையிருப்பில் உள்ள தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, வழங்குநரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றைக் கொண்ட பற்றுச்சீட்டு அல்லது விலைப்பட்டியலை அல்லது இலத்திரனியல் மூலமான உறுதிப்படுத்தல்களை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆவணங்களின்றி பொருட்களை, கொள்கலன், களஞ்சியம், வர்த்தக நிலையம் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தவோ, விநியோகிக்கவோ, காட்சிப்படுத்தவோ அல்லது கோரவோ முடியாது என நுகர்வோர் அதிகாரசபை பணிப்புரை விடுத்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts