மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

இன்று(28)காலை இடம்பெற்ற விபத்தில் மாளிகாவத்தை காவல் நிலையத்திற்கு எதிரே நடந்த வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதியும் பாதசாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.