பிந்திய செய்திகள்

நன்கொடைகளை கோர ஆரம்பிக்கும் இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வெளிநாட்டு நாணய நன்கொடைகளை கோரும் அறிவிப்பை இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு போன்ற மிகவும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி உறுதியளிக்கிறது.

பற்றுச்சீட்டுக்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நன்கொடைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக மூன்று மூத்த மத்திய வங்கி அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts