பிந்திய செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்

தனியார் எரிபொருள் பவுசர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில், அரசாங்க பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பவுசர்களை எரிசக்தி அமைச்சு பயன்படுத்தும் என துறைக்கு சார்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

தனியார் எரிபொருள் பவுசர் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தனது டுவிட்டர தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனியார் எரிபொருள் பவுசர் சேவைகளுக்கான கட்டணம் 2021 ஜூலை முதல் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 மாதங்களில் அனைவரும் ஏற்றுக்கொண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி 84% கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான பவுசர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் பவுசர்கள் மற்றும் தனியார் வாடகை பவுசர்களை பயன்படுத்தி நாடு முழுவதும் எரிபொருளைக் கொண்டு செல்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts