பிந்திய செய்திகள்

நடுக்கடலில் வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு விபத்து

நேற்று வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.

படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.

தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts