பிந்திய செய்திகள்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல நாடுகளில் ஆரம்பிக்கும் போராட்டம்

இலங்கையின் தற்போதைய அரச தலைவர் , பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஐக்கிய அமெரிக்கா முழுவதும் 2022 ஆம் ஆண்டு மே மாதம்(நேற்று )1 ஆம் திகதி அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் போராட்டம் செய்திருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கண்டனத் தொடரில் அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தங்கள் சக இலங்கையர்களுடன் ஒற்றுமையாக நின்றிருந்தனர்.

அமெரிக்காவில் 43 மாநிலங்களில் 50 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ராஜபக்சவின் சொத்து மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தி இலங்கையை ராஜபக்சக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களும் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் கடிதங்கள் செனட் மற்றும் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Gallery
Gallery
Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts