Home இலங்கை ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கும் அதிகாலை விபத்துகள்…

ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கும் அதிகாலை விபத்துகள்…

0
ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கும் அதிகாலை விபத்துகள்…

இன்று (3)அதிகாலை யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் தெரியவருகையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here