இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான்
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை கட்டிடமொன்றின் தேவையை கருத்திற் கொண்டு அப்பகுதி மக்களும் வைத்திய அதிகாரிகளும்அவர்களிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து குவைட் நாட்டின் நிதி பங்களிப்புடன் ISRC தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள (தளபாடங்கள் உள்ளடங்கலாக) வைத்தியசாலை கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த (30) கிராமிய பொருளாதாரப் பயிர்ச்செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.உமா சங்கர், ISRC தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் M. சயாப், முஸ்லிம் ஹேண்ட்(Muslim hand) நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், நிர்வாகத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது