பிந்திய செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு-வெளியான தகவல்

இலங்கையில் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என 2022-05-03 திகதியிடப்பட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts