பிந்திய செய்திகள்

அவசரகாலச் சட்டம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு சீற்றம்

இலங்கையில் மே 7ஆம் திகதி இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியானதாகவும், சாதாரண காவல்துறை நடவடிக்கைகள் வரம்பிற்குள்ளும் இருந்திருந்தால் இதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டு இருக்காது, இந்த அறிவிப்புக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக் காவலுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அவசரகாலத்தின் போது பாதிக்கப்படாது அல்லது அவமதிக்கப்படாது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts