பிந்திய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள இளைஞர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் கூறியது

இலங்கையில் பொருளாதாரா நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி சிங்கள இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கட்டுரையில் கூறியுள்ளதாவது , சிங்கள இளைஞர்களுக்கு– போரின்போது அதுவும் முள்ளிவாய்காலில் தமிழர்களின் உள்ளாடைகளைக் களைந்து மானபங்கப்படுத்தினர் உங்கள் ஆட்சியாளர்கள்— (மட்டக்களப்பில் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கைக்குண்டு வெடிக்க வைத்து மகிழ்ந்த சம்பவங்களும் உண்டு- இவை சில உதாரணங்கள்) ஆனால் இன்று அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக நீங்களே உங்கள் உள் ஆடைகளைக் களைந்து கம்பிகளில் தொங்கவிடுகின்றீர்கள்-

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறியபோது, யாப்பா பட்டுனே என்று யாழ்ப்பாணத்தின் பெயரை மாற்றி அப்போதை பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த ஜனாதிபதி சந்திரிகாவிடம் பட்டயம் ஒன்றைக் கையளித்தார். இந்த நிகழ்வு காலிமுகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது, கொழும்பில் வெடி கொழுத்திப் பால்சோறு கொடுத்து இனிப்புப் பண்டங்களும் வழங்கிக் கொண்டாடினீர்கள்— வெள்ளவத்தையில் தமிழ் பெண்களைக் கண்டால் உள்ளாடைகளைக் காண்பித்துக் கிண்டலடித்தனர் சில சிங்கள இளைஞர்கள்.

2009 இல் போரின் வெற்றிக் கோசத்தின்போது கொழும்பில் தொடர்ச்சியாக ஒருவாரம் வரை வெடிகொழுத்திப் பாற்சோறு கொடுத்து இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்ந்தீர்கள்– வீதியால் சென்ற சில தமிழர்களுக்குப் பலாத்காரமாகப் பாற்சோறும் தீத்தி மகிழ்ந்தீர்கள்— ——இதெல்லாம் நான் கொழும்பில் எனது கண்களினால் கண்ட காட்சிகள்—

இன்று அதே கண்களினால், அதே ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சிங்கள இளைஞர்களாகிய நீங்கள் வீதியில் உள்ளாடைகள் இன்றி நிற்பதைக் காண்கிறேன்— உங்கள் ஆட்சியாளர்களைக் கள்ளவர் கூட்டம் என்று வீதியில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கோசமிடுவதையும் என் காதுகளினால் கேட்கிறேன்- –ஆனால் இதனையிட்டுத் தமிழர்கள் எவருமே மகிழ்ச்சியடையவில்லை—

ஆனால் மகாவம்ச மன நிலையில் இருந்து உங்கள் பௌத்த குருமார் விடுபட வேண்டும். இது எங்கள் இலங்கைத்தீவு என்ற எண்ணக் கருத்தை உருவாக்கச் சிங்கள இளைஞர்களாகிய நீங்கள் முன்வர வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்– நாங்கள் ஒன்றுபட்டால், இந்தியா என்ன, அமெரிக்கா என்ன எந்தக் கொம்பனாலும் இலங்கைத்தீவை அசைக்க முடியாது.

ஆகவே தமிழ் – முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய அரசியல் – பொருளாதார அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை எல்லோரும் சேர்ந்து உருவாக்கினால் நிச்சியம் இந்த இலங்கைத்தீவு உயர்ந்து நிற்கும்- வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று அங்கீகரிப்பதில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது- இந்தியா என்றால் அது தமிழர்களின் நாடு என்ற தேவையற்ற கற்பனையை நீங்கள் (சிங்களவர்கள்) இனிமேல் கைவிட வேண்டும.

ஏனெனில் தமிழர்களுக்கு இந்தியா எதுவுமே செய்யவில்லை- காலம் காலமாக ஏமாற்றியதுதான் மிச்சம்— அத்துடன் ஈழத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் அரவனைக்காது- அத்துடன் தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவும், இந்தியா சொல்வதையே கேட்கிறது என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும்— இதே இந்தியாவையும் இதே அமெரிக்காவையும் வைத்தே 2009 இல் இறுதிப் போரை நடத்தினார்கள் உங்கள் ஆட்சியாளர்கள்- சீனாவையும் தாராளமாகப் பயன்படுத்தினர்.

ஆனால் இன்று அதே இந்தியாவும் அதே அமெரிக்காவும் உங்கள் ஆட்சியாளர்களை முழங்காலில் இருத்திவைத்தே தமக்குரிய புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களைப் பேரம் பேசுகின்றன. சீனாவும் உங்களுக்கு இரட்டை முகத்தையே காண்பிக்கிறது. இந்த வல்லாதிக்க நாடுகள் நினைத்தால் 24 மணி நேரத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியும்– ஆனால் வேண்டுமென்றே உங்கள் ஆட்சியாளர்களை முழங்காலில் இருத்தி வைத்து நோகடிக்கிறார்கள்-

ஆனால் இதைக் கண்டும் தமிழர்கள் எவருமே மகிழ்ச்சியடையவில்லை- மாறாக வேதனைப்படுகின்றனர்—-ஏனெனில் தங்கள் அரசியல் விடுதலையின் அவசியத்தை உங்கள் ஆட்சியாளர்கள் ஏற்க மறுப்பதையிட்டு– ஆகவே மனம் திறந்து பேசுவோம்- நாங்களே எங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம் வாருங்கள்– வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் நீர் வளம், நில வளம், உற்பத்திகளுக்கான மூலப் பொருட்கள், முடிவுப் பொருட்கள் தாராளமாகே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts