பிந்திய செய்திகள்

2 பிள்ளைகளின் தந்தையான வங்கி ஊழியரின் உயிரைப் பறித்த விபத்து!

இன்று (07)சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் எருவில் சமுர்த்தி வங்கியின் காசாளராக கடமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் ( 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கம் நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று மோதியதில் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார். .

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts