பிந்திய செய்திகள்

சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொய்ப் பிரச்சாரம் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்க நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூலில்,

அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கிறேன்.

காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர் காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.

ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துணிச்சல் மிக்க போராளிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளை நான் முழு மனதுடன் ஆதரிக்கின்றேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts