பிந்திய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிச் சீட்டு நாளை முதல் விநியோகிக்கப்படும். ஊரங்கு சட்டம் நாட்டில் பிறப்பிக்கப்பட்டமையால் கடந்த சில தினங்களாக அனுமதிச் சீட்டு விநியோகத்தில் தாமத நிலை ஏற்பட்டது.

எனினும் அனுமதிச் சீட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார். மேலும் திங்கட்கிழமைக்குள் அது தொடர்பிலான சகல நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts