பிந்திய செய்திகள்

மூதாட்டியை துஸ்பிரயோகம் செய்த பேத்தியின் கணவன்…!

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் செய்ததாக கடந்த 08.05.2022 அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதான நபர் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரல் கடந்த 10ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சந்தேக நபரை இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts