பிந்திய செய்திகள்

முடங்கும் நிலையில் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகள்

இலங்கையில் டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

தொடர்ந்து டீசல் கிடைக்காவிடத்து நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பேருந்துகளும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts