பிந்திய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போரில் புதிய திருப்பம்!!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்.

உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளைக் கொண்டு ரஷ்யாவிற்கு தொடர்ந்தும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது.

அதேபோன்று, உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷ்யா பல்வேறு விதமாக தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஆனாலும், தற்போது அந்த நகரத்தில் இருந்து தனது துருப்புகளை மீளெடுப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா, தனது வணிகப் பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts