பிந்திய செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையில் 20 புதிய அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு மேலதிகமாக, அதிக எண்ணிக்கையிலான திணைக்களங்களைக் கொண்ட அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதியமைச்சர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அமைச்சர்களுக்கான விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts