பிந்திய செய்திகள்

புதிய பிரதமரின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று…

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச்செல்வதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம், அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர பதவியேற்றிருந்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts