பிந்திய செய்திகள்

அவுஸ்ரேலியா மற்றும் இலண்டனிலும் வெடித்தது போராட்டம்

அவுஸ்ரேலியா மற்றும் இலண்டனில் வசிக்கும் இலங்கையர்கள், இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இலங்கையிலிருந்து மோசடி குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அரசியல்வாதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வருவதை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்ததுடன் ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிப்பு வேட்டையையும் ஆரம்பித்தனர்.

பிரித்தானியாவின் லண்டனில் ஒன்று கூடிய இலங்கையர்கள், அரச தலைவர் கோட்டாபயராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பலஸ்தீனியர்களும் இணைந்து ‘ கோட்டா கோ ஹோம் ‘ என குரல் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts