பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேசநாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.