பிந்திய செய்திகள்

பிரித்தானிய தேர்தலில் வென்ற இலங்கை அரசியல்வாதியின் மகள்

கொழும்பு முன்னாள் மேயரும் ஊவா மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மிலின் புதல்வி ஷாஸ்னா முஸ்ஸமில், பிரித்தானிய பிராந்திய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Milton Keynes சபைக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கொன்சர்வேடிவ் கட்சி இந்த பிராந்தியத்தில் பின்னடைவை சந்தித்த போதிலும் அங்கு முதலிடத்தை பெற்று ஷாஸ்னா முஸ்ஸம்மில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷாஸ்னா கார்டிஃப் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்தில்அபிவிருத்தி முகாமைத்துவம் தொடர்பான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஷாஸ்னா முஸ்ஸாமில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

பிரித்தானியாவில் பிராந்தியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts