அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று (18) தலைநகரில் வெடித்த போராட்டங்களின் பின்னர் யுத்த வெற்றியை கொண்டாட நீண்ட நாட்களின் பின்னர் வெளியேவந்துள்ளார்.
யுத்த வெற்றி, போரில் உயிரிழந்த, அங்கவீனமடைந்த படையினரை நினைவு கூரும் வகையிலும் நடத்தப்படும் தேசிய நினைவு தின நிகழ்வு முப்படை தளபதியும் அரச தலைவருமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள தேசிய படையினர் நினைவு தூபிக்கும் அருகில் இன்று நடைபெற்றது.
![நீண்ட நாட்களின் பின் வெளியே வந்தார் கோட்டாபய! (படங்கள்)](https://cdn.ibcstack.com/article/4db7f02f-2507-4c08-8f6e-a793caf28495/22-628615969e0fe.webp)
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவ தளபதி சவேந்திர சில்வா, கடற்படை விமானப் படை தளபதிகள் மற்றும் காவல் மா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்
![நீண்ட நாட்களின் பின் வெளியே வந்தார் கோட்டாபய! (படங்கள்)](https://cdn.ibcstack.com/article/615f7106-065a-498d-86f7-a7a86ba6617d/22-62861596c3e80.webp)
காலிமுகத் திடல் உட்பட நாடு முழுவதும் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமான பின்னர், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, நிகழ்வுகள் எதிலும் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார்.