பிந்திய செய்திகள்

புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதியில் தீ விபத்து!

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சிறப்புமிக்க புகையிரத நிலையமாக தெமோதரை காணப்படுகின்றது.

இந்த புகையிரத நிலையத்தின் அமைப்பிற்கு இந்த மலைத்தொடர் பெரிதும் அழகான தோற்றத்தை அளிக்கின்றது. இனந்தெரியாதவர்கள் தீ வைக்கப்பட்ட மையால் இந்த மலைத்தொடரில் காணப்பட்ட பாரிய மரங்கள் பசுமையான தோற்றம் அழிவடைந்து உள்ளது.

எமது சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் பொது மக்களாகிய நாம் அவற்றை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி அவற்றை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்வாறு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் நாமும் நமது எதிர்காலத்தையும் அளிக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றோம். இன்றைய கால சூழ்நிலையில் எம் பொருளாதார நெருக்கடிக்கு சுற்றுச்சூழலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

எனவே எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நேற்று 19.05.2022 ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் புகையிரத நிலையத்தை சார்ந்த 40க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது. பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப்பகுதி முற்றாக தீக்கிரையானது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts