அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்றைய தினம் இலங்கையின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்தப் புதிய அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமன்றி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கமைய, ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட சாந்த பண்டார, வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளதாகவும், உண்மையை உணர்ந்து இன்று சர்வகட்சி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.