பிந்திய செய்திகள்

கோட்டா கோ கமவிற்கு ஆதரவாக வன்னியில் இருந்து துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பம்

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20) மாலை வவுனியாவை சென்றடைந்தது. வவுனியாவை அடைந்த அவர், இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார்.

Gallery

கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் கருதியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கக் கோரியும் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசுவமடுவிலிருந்து கோட்டா கோ கமவிற்கு சைக்கிளில் புறப்பட்ட குடும்பஸ்தர்! |  TamilWireless

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts