பிந்திய செய்திகள்

ஆசிரியரின் மூர்க்கத்தனமான செயலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts