பிந்திய செய்திகள்

உயர்தர நாய்களை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை

வெளிநாடுகளில் இருந்து 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாய்களில் ஒன்று சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் வழங்கல் சேவை பிரிவு நாய்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நாய்க்குட்டிகளைப் பெற்று பல்வேறு பொலிஸ் கடமைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என நம்புவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பொலிஸ் துறை கடந்த 2019 முதல் நாய்கள் மற்றும் குதிரைகளை வாங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts