பிந்திய செய்திகள்

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்..?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக இணக்கம் வெளியிட்டுள்ளார். என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு கையளிக்க இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடிய போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் அரச தலைவர் ஒருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஸ் பத்திரனவிற்கு வழங்க கோட்டாபய முன்வந்தார். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே பாதுகாப்பு அமைச்சராக கோட்டாப பதவியேற்றதாக கூறப்படுகிறது.

இதேவேளை பிரதமர் தொடர்ந்தும் நிதி விவகாரங்களை பொறுப்பேற்றுள்ளார். வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அதி சிறப்பு அமைச்சொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டபாயவின் திடீர் முடிவு - சிறிலங்கா அரசியலில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts