பிந்திய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்கள் பற்றி வெளிவந்த தகவல்

இலங்கையில் நேற்று (23)திங்கட்கிழமை ஆரம்பமான 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மாணவர்களின் வருகை உச்ச மட்டத்தில் காணப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது

பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு முன்கூட்டியே வருகைத் தந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

ஒட்டுமொத்த பரீட்சை நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது.

தற்போதுள்ள சூழ்நிலைகள் காரணமாக பிரச்சினைகள் எழும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்பட்ட அறிக்கைகளின்படி அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் வெளிவரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து பரீட்சை நிலைய ஊழியர்களும் பரீட்சைகளை சரியான நேரத்தில் ஆரம்பித்தனர்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் சீராக நடைபெறுகிறது.

சில ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் மாணவர்களுக்கான வசதிகளை வழங்கியுள்ள அதே வேளையில், பல்வேறு குழுக்கள் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

O/L மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் நடத்துநர்கள் போதியளவுக்கு அதிகமான பஸ்களை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களில் தனியார் பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்து சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

2021 O/L பரீட்சையை சுமூகமாக நடத்துவதற்கு பங்களிப்புச் செய்த பொதுமக்கள், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பரீட்சைகள் திணைக்கள ஊழியர்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாராட்டினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் வெசாக் போயா உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் தனது ஊழியர்கள் 24 மணிநேரமும் வேலை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களிலும் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான சூழலை உறுதிப்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

க.பொ.த.சாதாரண தர பரீட்சை காலத்தில் வீதிகளை மறித்து போராட்டங்களை நடத்த வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிதளவு தாமதம் கூட அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான நேரத்தில் மாணவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts