Home இலங்கை 50 நாட்கள் நெருங்கியும் விடாப்பிடியாக நிற்கும் கோட்டாபய

50 நாட்கள் நெருங்கியும் விடாப்பிடியாக நிற்கும் கோட்டாபய

0
50 நாட்கள் நெருங்கியும் விடாப்பிடியாக நிற்கும் கோட்டாபய

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 49 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் போராட்டத்துக்கு நேற்றைய தினமும் பலர் ஆதரவு வழங்கியிருந்தனர். ‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது,நாளை 50 ஆவது நாளில் கால்பதிக்கின்றது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காது பதவி விலகாது நீடிக்கின்றார். அதேசமயம் தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here