பிந்திய செய்திகள்

ராஜபக்ஷர்களுக்கு அடி மேல் அடி கொடுக்க தயாராகிறார் – இராணுவத் தளபதி!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்கு உகந்தவருமான இம்மாதம் 31ம் திகதியுடன் தனது பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் முப்படைகளின் பதில் பிரதம பிரதானி பதவியை வகிக்கும் சவேந்திர சில்வா , ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அந்தப் பதவியில் நிரந்தரமாக நியமிக்கப்படவுள்ளார்.

எனினும் மிக விரைவில் முப்படைகளின் பிரதம பிரதானி பதவியில் இருந்தும் சவேந்திர சில்வா விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றான.

அதேசமயம் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் ஒருவர் சம்பிரதாயமாக முப்படைகளின் பிரதானி என்ற பதவியை வகிக்க வேண்டும் என்பதன் காரணமாக சிறிது காலம் மட்டுமே பிரதானியாக இருப்பார் என்றும், அதன் பின்னர் அதனை விட்டும் இராணுவ சேவையை விட்டும் முற்றாக ஒதுங்கிக் கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பதவி ஓய்வின் பின்னர் அவர் அரசியலுக்கு வரப்போவதாகவும், வௌிநாடொன்றில் குடும்பத்துடன் குடியேறப் போவதாகவும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

எனினும் சவேந்திர சில்வா வௌிநாடொன்றின் தூதுவராக நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts