Home இலங்கை 5 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு காய்ச்சல்!!

5 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு காய்ச்சல்!!

0
5 வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு காய்ச்சல்!!

உடுவில் பகுதியைச் சேர்ந்த பரசுதன் யோயிட எனப்படும்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும் சிறுமிக்கு கடந்த 23ம் திகதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. பனடோல் மாத்திரை கொடுத்ததில் இருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சிறுமிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் இணுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும், காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக அன்றிரவு சிறுமி மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here