Home இலங்கை முதலாம் திகதியன்று ஏலத்திற்கு விடும் திறைசேரி உண்டியல்கள்

முதலாம் திகதியன்று ஏலத்திற்கு விடும் திறைசேரி உண்டியல்கள்

0
முதலாம் திகதியன்று ஏலத்திற்கு விடும் திறைசேரி உண்டியல்கள்

இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளனவும் . அதன்படி 83,000 மில்லியன் ரூபாவுக்கான உண்டியல்களே ஏலவிற்பனைக்குவிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்பப்படவுள்ளன.

இதற்காக அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதனிலை வணிகர்களிடம் இருந்து விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன.

அதேசமயம் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு வசதியூடாக மட்டுமேவிலைக்குறிப்பீடுகள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here