Home இலங்கை அனுராதபுரத்தில் விபத்து – தாயும் மகளும் உயிரிழப்பு – தந்தையும் மகனும் படுகாயம்!

அனுராதபுரத்தில் விபத்து – தாயும் மகளும் உயிரிழப்பு – தந்தையும் மகனும் படுகாயம்!

0
அனுராதபுரத்தில் விபத்து – தாயும் மகளும் உயிரிழப்பு – தந்தையும் மகனும் படுகாயம்!

இன்று (02) அதிகாலை 5.20 மணியளவில் அனுராதபுரம், கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தெரியவருகையில்

தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் தம்புள்ளை ரத்மல்கஹா எல பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here