Home Blog Page 226

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற துருக்கி வெளியுறவு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

0

இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை…!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர் எடியூரப்பா. இவரது மூத்த மகள் பத்மாவதி. இவருக்கு சௌந்தர்யா என்ற டாக்டர் மகள் உள்ளார். இந்த நிலையில் பத்மாவதியின் மகள் மற்றும் எடியூரப்பாவின் பேத்தியான சௌந்தர்யாவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டாக்டர் நீரஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. பெங்களூரு நகரில், குடும்பத்துடன் வசித்து வந்த சௌந்தர்யா இன்று காலை 8 மணிக்கு, கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால், அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், கதவை உடைத்து பார்த்தபோது பிணமாக தொங்கிய நிலையில் சௌந்தர்யா இருந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் எடியூரப்பா குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட விசேட போக்குவரத்துத் திட்டம்

0

இலங்கையில் வருகின்ற பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை நாளை முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனால் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த கால கட்டத்தில் காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் காலை 06.00 மணி முதல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இனி மாட்டு வண்டியில் தான் பயணம்..!

0

சிறிலங்காவில் அந்நிய செலாவணி கையிருப்பு பயங்கரமாக குறைந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் இருந்த ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் டாலர் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டது.

ஆலை மூடப்பட்டதால் சுத்திகரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. ஆனால், டிசம்பர் மாத தொடக்கத்தின்போது ஒரு மாதத்திற்கு மட்டுமே பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ரூபாய் உயர்ந்து 177 ரூபாயாக உள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை 10 ரூபாய் உயர்ந்து 121 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களை வாங்க இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரம்மாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நிச்சயதார்த்தம்

0

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஒவ்வொரு முறை நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும்.

சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாகர்கள் அதிகம் வருகிறார்கள்.அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பல முறை பெரிய பாடகர்களையே வியக்க வைத்துள்ளார்.

Ajay Krishnaa: Movies, Age, Photos, Family, Wife, Height, Birthday,  Biography, Facts, Filmography, Upcoming Movies, TV, OTT, Social Media,  Facebook, Instagram, Twitter, WhatsApp, Google YouTube & More » Celpox

சூப்பர் சிங்கரை தாண்டி அஜய் கிருஷ்ணா ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும் வருகிறார்.
தற்போது இவருக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அவர்களின் அழகிய புகைப்படம் இதோ,

பிரம்மாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நிச்சயதார்த்தம் - வைரலாகும்  புகைப்படம்!!

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைது…!

0

பாணத்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள்

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார்.

இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்து கொண்டு மேலும் சிலஅதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன்.

இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவுமருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு 71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார்.

என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார் எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத்துறையின் சுயாதீனத்தினுள் ஊடுருவும் அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் ஒரு அரச சார்பு கட்சியின் உறுப்பினர்.

இந்த காணொளியை செவிமடுக்கும் போது வடக்கின் மருத்துவ கட்டமைப்புக்குள் எவ்வளவு தூரம் அரசியல் உள்நுழைந்து விளையாடுகிறதென்பதை அறிய முடியும். வைத்திய அதிகாரியை மிரட்டும் குறித்த நபர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரு சாதாரண நபர்.

அவருக்கு அப்பகுதி மக்களே வாக்களிக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மருத்துவ அதிகாரியைப்பார்த்து அடிப்பன், உடைப்பன், மூஞ்சையை கிழிப்பன் என்றெல்லாம் பேசுவதும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வைத்து வேலையை விட்டு கலைப்பன் என்றெல்லாம் சவால் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

இதில் இன்னுமொரு கேவலமும் உண்டு குறித்த பெண் மருத்துவர் துணிச்சலாக நீ யார் என்னை கேள்வி கேட்க என்று அந்நபரிடம் கேட்கிறார் ஆனால் அவருக்கு மேல் அதிகாரியான கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS)குறித்த அந்த அரசியல் இடைத்தரகரான நபரிடம் தனக்கு கீழ் பணியாற்றும் MOH பற்றி முறைப்பாடு செய்ததாக அந்த நபரே கூறுகிறார்.

படித்து பட்டம் பெற்ற ஒரு RDHS அவரின் பதவியின் மதிப்புக்கூட தெரியாமல் ஒரு பிரதேச சபை மெம்பராக கூட இல்லாத ஒரு நபரிடம் MOH ஐ மாற்ற அரசியல் பலத்தை காட்டச்சொல்லி சொல்லியிருக்கிறார் என்கிறபோது அவரின் பதவிக்கு என்ன மதிப்பிருக்கிறது? இப்படி தற்துணிவற்ற அவர் கீழ்த்தர அரசியலூடாக சாதிக்க நினைக்கும் அவர் வைத்திய அதிகாரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வார் என்று எப்படி நம்ப முடியும்?

குறித்த கண்டாவளை M.O.H அதிகாரிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனின் செக்கரட்டி கோல் எடுத்ததாகவும் M.O.H ஆன்சர் பண்ணவில்லையென்றும் நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா என்று குறித்த அரசியல் அல்லக்கை கேட்கிறார்.

சுரேன் ராகவன் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாது ஒரு எடுபிடி எம்.பி அவருக்கே இங்கு மரியாதை கொடுக்க அவசியம் இல்லை அவரின் செக்கரட்டி செவ்வேளுக்கு ஏன் பயந்தடித்து பதில் சொல்லவேண்டும்? கிளிநொச்சி மக்கள் தமக்கென ஏகோபித்த மக்கள் ஆதரவோடு சிறீதரன் அவர்களை பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர்.

M.S Mathiaparanan Abraham Sumanthiran அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். இந்த மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாரோ ஒருவர் நியமித்த பாராளுமன்ற உறுப்பினரின் செக்கரட்டியின் கதைக்கெல்லாம் எங்கள் மாவட்டத்தின் வைத்திய அதிகாரி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார். இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இலங்கைக்கு சபாநாயருக்கும் உறுதியான கோவிட் தொற்று…!

0

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை மற்றும் அதன் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இது வரையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சபாநாயருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினம்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார்.

ஏற்கனவே 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார். அதன் பின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இதையடுத்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்க உள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அது கவுரவமாக இருக்கும். எனது திறமைக்கு ஏற்றவாறு என்னால் முடிந்த வரை நான் பங்களிக்க எப்போதும் விரும்புகிறேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்ற அடிப்படையில் ஒரு ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் ஆக்ரோ‌ஷமாக இருப்பார். போட்டியில் வெற்றி பெறவும், விக்கெட்டை வீழ்த்தவும் முயல்வார். கபில்தேவ், இம்ரான்கான் போன்ற ஆல் ரவுண்டர்களை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருப்பது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அயல் தேசத்தவரால் சூறையாடப்படும் வளங்கள்-ஆரம்பிக்கப்பட்ட பேராட்டம்!

0

இன்றைய தினம்(28)யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் அங்கிருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்றனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக அரச தலைவர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்.

அதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் செல்வதனால் , எமது கடல் வளங்களும், கடல் சூழலும், எமது உபகரணங்கள், வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். பல தரப்புக்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளோம். இருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை .

மேலும் வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபாய் அதற்கான நஷ்டடஈடுகளை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை மலர்ந்துள்ள இந்த வருடத்திற்குள் எமக்கு தீர்வினை பெற்று தர சகல தரப்பினர்களும் முயற்சிகளை முன்னெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , கடல் வளத்தையும் காத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.