Home Blog Page 232

பிரபல நடிகைக்கு 91- வது வயதில் கிடைத்த மகிழ்ச்சி

0

இந்த ஆண்டு நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.

பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது.

Health at 90: Memories of Sowcar Janaki || 90 வயதிலும் ஆரோக்கியம்: சவுகார்  ஜானகி மலரும் நினைவு

புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார். சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கணேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

விருது பெற்றது குறித்து சவுகார் ஜானகி கூறுகையில், “தான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். எனது 91-வது பிறந்த நாளுக்கு பிறகு இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி !

0

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட குறித்த நபரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டார் என்றும் அதன்போது, அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த ஏடிஎம் கார்ட்டினை பயன்படுத்தியே பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம்; மெரினாவில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர்

73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடி ஏற்றினார். இதன்போது கொடிமீது ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.

முன்னதாக முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

அதேசமயம் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் காலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யபபட்டுள்ளன. மேலும் குடியரசுத் தின விழாவைக்க காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இலங்கை மின்சார சபை தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

0

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி பெர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்குள்ளானார்.இதன் காரணமாக, இவரின் செயற்பாடு தொடர்பில் பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பந்துல குணவர்தன

0

சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சந்தித்து கலந்துரையாடியபோது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கூறியுள்ளார் .

இது தொடர்பில் இம்ரான் கான் மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் தங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இச்சந்திப்பானது நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பந்தல குணவர்த்தன கருத்து வெளியிடுகையில்,

பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இந்த சந்திப்பின் ​போது தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்பிற்கு நன்றி செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Prime Minister’s Office, Pakistan@PakPMOMinister of Trade of Sri Lanka, Dr. Bandula Gunawardhana (@BandulaDr) and State Minister for Regional Cooperation, Mr. Tharaka Balasuriya (@TharakaBalasur1) paid a courtesy call on Honorable Prime Minister @ImranKhanPTI today.0:35 / 0:356:59 PM · Jan 25, 2022Read the full conversation on Twitter

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மற்றும் சிறுமியின் சடலங்கள் !

0

பொஹெம்பியகந்த பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்,பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் . சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் 20 வயதுடைய இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையின் விசாரணையின் போது தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இருவரும் காதலர்கள் என கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரதமர் மோடி அழைப்பு

நேற்றுபிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது இந்தியாவில் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி அதன் கண்ணியத்தை பாதுகாத்து வருகிறது.

நம் நாட்டில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு, அதிகாரிகளை இட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்படவில்லை இல்லை.

1951-52-ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் இருந்த வாக்குப்பதிவு சதவீதம் தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவாக வாக்குகள் பதிவாவது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

கல்வி அறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகிற நகர்ப்புறங்களில் கூட குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தைத்தான் பார்க்க முடிகிறது. படிப்பறிவு உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டு போடத்தான் வருவதில்லை.

இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பிற கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது. இதை சரி செய்வதற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்பது தான் சரியாக இருக்கும் என கருதுகிறேன். மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளியே வரட்டும்.

என்னை பொறுத்தவரை தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இலங்கை பிரதமருக்கும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல்…

0

இன்று (புதன்) கிழமை இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேல் மாகாணத்தில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

0

இன்று (புதன்கிழமை) காலை மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்

பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13, 000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இதற்கு முன்னரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை பொலிஸாருக்கு பயிற்யை ஆரம்பித்த பிரபல நாடு….!

0

இலங்கை பொலிஸாருக்கு மீண்டும் பயிற்சிகளை வழங்க பிரிட்டன் முயன்று வருவதாக சண்டே போஸ்ட் பத்திரகை கூறியுள்ளது. குறித்த பத்திகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்தியுள்ள போதிலும் பிரிட்டன் தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கலாம்.

இலங்கை பொலிஸாரினால் கைது செய்து வைக்கப்பட்டிருந்தவேளை பாலியல்வன்முறைகள், மின்சாரசித்திரவதைகள், சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இலங்கையிலிருந்து தப்பி ஸ்கொட்லாந்து வந்த பின்னர் தங்கள் அனுபவங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தங்களின் நீண்ட கால பயிற்சி இலங்கை பொலிஸார் நடந்துகொள்ளும்விதத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துவந்த ஸ்கொட்லாந்து பொலிஸ் கடந்த மாதம் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை கைவிட்டுள்ளது.

எனினும் பிரிட்டன் தான் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸார் தங்கள் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டதன் அர்த்தம் இலங்கை பொலிஸாருக்கு இங்கிலாந்தின் நிதியுதவியுடனான திட்டம் எதுவும் எதிர்காலத்தில் இருக்காது என்பதல்ல என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தின் கடிதம் தெரிவித்துள்ளது.

எந்த எதிர்கால திட்டத்திற்குமான தனது அணுகுமுறை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது தற்போதைய மறுஆய்வின் போது பல காரணிகளை கருத்தில் கொள்வோம் என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து இலங்கைஅரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது என சண்டே போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்தின் பிரான்சிஸ்ஹரிசன் இந்த செய்தி மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.