Home Blog Page 233

மீண்டும் இலங்கையில் அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரதம்!!!

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட “புலதுசி ” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை மீண்டும் எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியின் தீர்மானத்திற்கு குறித்த ரயில் சேவை மட்டக்களப்பு – கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

குறித்த புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52 க்கு மட்டக்களப்பை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்!

நேற்றிரவு(25)யாழ்ப்பாணம் – அரியாலை மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வைத்தியர்களின் வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். பிரபல தனியார் விடுதியில் இருந்து வைத்தியர்கள் சிலர் குறித்த காரில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். எனினும் காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவர், நோயாளர்காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Gallery
Gallery

இலங்கைக்கு பிரித்தானியா செய்த மாபெரும் உதவி…!

0

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வது வலுவான இன்றியமையாததாகும்.

இதன்மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் அதிகரிக்கும் என அமைச்சர் தாரிக் அஹமட் சுட்டிக்காட்டியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இனங்களுக்கிடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் ஆகிய திட்டங்களை மேற்கொள்வதற்காக மோதல், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் இலங்கைக்கு 3.7 மில்லியன் வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிலையில், அமைச்சர் தாரிக் அஹமட்டின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் தாரிக் அஹமட், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் நிதிச் சேவைகளில். மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இலங்கைக்கான தனது விஜயம் தொடர்பில் அமைச்சர் தாரிக் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பின் அடிப்படையிலான அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவது பலமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமானது. அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தவும் முடியும்.

சமூகங்களுக்கிடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களைக் கொண்ட திட்டங்களை மேற்கொள்வதற்காக முரண்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் இலங்கைக்கு 3. 3.7 மில்லியனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது தாரிக் அஹமட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவின் முக்கியத்துவம் மற்றும் கொரோனா வைரஸ் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு பொருளாதார மீட்சி உள்ளிட்ட பரஸ்பர நலன்களின் பொதுவான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் தாரிக் அஹமட், அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் கவலைக்குரிய விடயங்கள், உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் பங்கேற்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஒரு சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் பிரிட்டன் முழு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா?

பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர் களை மாநகர ங்களிலும் சிறு நகரங்க ளிலும் பார்க்கலாம்.

காரணம், அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப் பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றி யிருக்கும்.

கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனால் தங்கள் குழந்தை களை எச்சரிக்கை செய்ய முடியாமல் போய் விடும்.

ஆனால் பெரும்பாலான, கிராமப் புறங்களில் இந்த அவதிகள் கிடையாது.

அங்கு பெரியவர்கள், கரும்பு தின்னும் குழந்தைகளிடம், ‘எலெ, தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்’ என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்த பிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்து விடாதீர்கள்.
அப்படி செய்தால், வாய் வெந்து விடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது.

“கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக் கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதி வினையாற்று கிறது.

அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.

இதனால், நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவ தால் இந்த பாதிப்பு வருவதில்லை” என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே, இந்த சிறு விழிப்புணர் வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.

சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள்

முட்டை – நான்கு

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)

தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

டேஸ்டியான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி?
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நான்கு அடித்து கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கயும்.

தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

தினமும் 3 கப் டீ குடிச்சா.. இடுப்பளவை குறைக்கலாம் !

தோசைக் கல்லை காய வைத்து காய்ந்ததும், முட்டையைக் கரண்டியில் எடுத்து ஊற்றி, சிறிதளவு எண்ணெய் விடவும். முட்டை வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

உங்கள் வீட்டில் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும் தவறாமல் வளர்த்து வாருங்கள்-உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்

இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு வந்ததும் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேசுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறது. இப்படி கணவன் மனைவி இருவருமே பேச நேரமில்லாமல் இருந்தால் உறவுகளுக்கிடையே எப்படி பேச்சுவார்த்தை இருக்கும். அவ்வாறு இன்றைய மனிதன் மிஷின் போல ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கிறான். இதற்கு காரணம் பணம் என்ற ஒன்று. இந்த பணத்தை சம்பாதித்தால் மட்டுமே சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். இப்படி அனைவருக்கும் தேவைப்படுகிற இந்த பணத்தை எப்படி பல மடங்காக நம்மிடம் ஈர்க்க முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மதிப்பதில்லை. ஒருவன் நல்ல மனிதனாக இருந்த பொழுதும் அவனிடம் பணம் இல்லை என்றால் அவரின் நல்ல குணம் மற்றவரின் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒருவரிடம் பணம் இருந்து அவர்களின் குணம் கெட்டதாக இருந்தாலும் அவர்களை புகழ்ந்து சொல்வதற்கு என்று அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அப்படி பணம் மற்றவர்களின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் தங்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக பணம் சம்பாதிப்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் உறவுகள் இடையே இருக்கும் பாசத்தையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் பணத் தேவை அதிகமாக இருக்கிறது.

இப்படி பணத்தின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த பணத்தை நம்மிடம் அதிகப்படியாக ஈர்க்கின்ற சில ஆன்மிக விஷயங்களை தொடர்ந்து செய்துவர பணக்கஷ்டம் குறைந்து, நல்ல வருமானம் கிடைக்கிறது. பணம் பல வழிகளில் நம்மைத் தேடி வருகிறது. இதற்காக சுக்கிரனிடம் வரம் பெற்ற மருதாணி செடியை தான் நமது வீட்டில் வளர்க்க வேண்டும்.

இதற்காக ஒரு மருதாணி செடியை வாங்கி வந்து, அதனை ஒரு சிறு தொட்டியில் வைப்பதற்கு உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் வளாகத்தில் இருந்து சிறிதளவு மண் எடுத்து வர வேண்டும். அல்லது ஆற்றங்கரை, கடற்கரை போன்ற இடங்களில் இருந்தும் மண் எடுத்துக்கொள்ளலாம். பின்னர் இந்த மண்ணையும் செடியுடன் இருக்கும் மண்ணையும் சேர்த்து தொட்டியில் வைப்பதற்கு முன்னர்,

அந்தத் தொட்டியில் ஒன்பது சில்லறை நாணயங்களை போட வேண்டும். பிறகு அதன் மீது இந்த மண் கலவையை கலந்து, செடியை அதில் பக்குவமாக வைக்கவேண்டும். பிறகு தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி காலை அல்லது மாலை வேளையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பிறகு காலை வெளியில் செல்வதற்கு முன்னர் இதிலிருந்து ஒரு இலையைப் பறித்து உங்கள் பணப்பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மாலை திரும்பி வந்ததும் இந்த இலையை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு இலையை உங்கள் பர்சில் வைத்து வர, உங்களிடம் வரும் பணம் பல மடங்காக அதிகரிப்பதை சில நாட்களில் உங்களால் உணர முடியும்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்(26-01-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்திற்கு இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குலதெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். உடல் தொந்தரவுகள் முற்றிலும் நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர் பதவி தேடி வரும்.

சிம்ம ராசி

அன்பர்களே, புது நண்பர்களோடு பழகும் போது கவனமாக இருக்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீட்டில் சுப செலவுகள் நிறைய உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எதிர்பாராத தனயோகம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது தொழில் யோகம் அமையும்.

துலாம் ராசி

அன்பர்களே, எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பணம் வரவில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்கள் வழியில் இருந்து மனக்கசப்பு மாறும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, சமூக அந்தஸ்து உயரும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மீன ராசி

நேயர்களே, கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். நினைத்தபடி காரியங்களை செயலாற்ற முடியும். எதிர்பாராத மருத்துவ செலவு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு படகுகுகளில் சிக்கிய பெரும் தொகை போதைப் பொருள்

0

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கொழும்புத் துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், அதனை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பார்வையிட்டார்.

தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு படகுகளில் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்து

0

பத்தனை மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்று சாரதி மீது சாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டத்தில் வசித்த 38 வயதான கருப்பையா கார்த்திகேசன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் மவுண்ட்வேனன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து நிறுவை செய்யும் இடத்தில் லொறியை விட்டு இறங்கிய போது லொறி ஒரு பக்கத்திற்கு சாய்வதை அவதானித்துள்ளார்.

லொறியில் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் கொழுந்து ஏற்றப்பட்டதால் லொறி சமநிலையின்றி சாயத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக லொறி சாய்வதை நிறுத்த முற்பட்ட போது லொறி அவர் மீது சாய்ந்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gallery
Gallery

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல் இலங்கை அரச தலைவரிடம் கையளிப்பு

0

முன்னாள் இராணுவ தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட 36 ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு “THE CONFLICT THAT ELUDED PEACE” என்ற நூலினை எழுதியுள்ளார்.

இந்த நூலின் முதல் பிரதி நேற்று அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

தரைப்படைப் பிரிவின் மேஜர் பதவியில் இருந்து இராணுவ தளபதியாக ஓய்வுபெறும் வரை இராணுவத்தில் அவர் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

போர் களத்தில் பெற்ற வெற்றிகள் மாத்திரமின்றி பின்னடைவுகள் தொடர்பான சரிநிகர் சமனான அளவில் இந்த நூலில் ஒப்பிட்டுள்ளதாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல் அரச தலைவரிடம் கையளிப்பு - ஐபிசி தமிழ்