கடந்த 4 நாட்களாக அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தாம் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், இந்த தடை உத்தரவு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதற்கு சட்ட உதவியை நாடவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லநம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.