Home உலகம் அவுஸ்திரேலியா பிரதமர் இலங்கை தொடர்பாக விடுத்துள்ள அறிவித்தல்

அவுஸ்திரேலியா பிரதமர் இலங்கை தொடர்பாக விடுத்துள்ள அறிவித்தல்

0
அவுஸ்திரேலியா பிரதமர் இலங்கை தொடர்பாக விடுத்துள்ள அறிவித்தல்

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையை தான் உறுதிப்படுத்துவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன்(Scott Morrison) அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here