Home உலகம் உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரிக்கை

உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரிக்கை

0
உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரிக்கை

ஐக்கிய அமெரிக்க வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (25) டேவிட் மல்பாஸ் பேசிய போது உக்ரெயின் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள்; உயர்ந்துள்ளதால் உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

முழு உலகும் கடுமையாக பாதிப்படையும்! உலக வங்கி தலைவர் எச்சரிக்கை
கொரோனாவின் தாக்கம்

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான உரடங்குகள் மந்தநிலை தொடர்பான கவலைகளை மேலும் தூண்டுவதாக அமைகிறது. உலகளாவிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நோக்கும்போது எம்மால் எவ்வாறு மந்தநிலையை தவிர்க்க முடியும் என்பதை பார்ப்பது கடினமாகும்.

எரிபொருள் விலையை இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும் யோசனையானது மந்தநிலையை தூண்டிவிட போதுமானது. இந்த வருடத்துக்கான தனது உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை கிட்டத்தட்ட முழு சதவீத புள்ளியான 3.2 வீதமாக உலக வங்கி கடந்த மாதம் குறைத்திருந்தது.

ஜீடிபி அல்லது மொத்த உள்ளூர் உற்பத்தி என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவீடு ஆகும். பொருளாதாரம் எந்த அளவு நன்றாக அல்லது மோசமாக செயற்படுகின்றது என்பதை அளவிடும் முக்கிய வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

அத்துடன் பொருளாதார நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கிகளால் அது உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எப்போது விஸ்தரிப்பது மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது முதலீட்டை குறைத்து தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பொன்றவற்றை தீர்மானிக்க இது வர்த்தகங்களக்கு உதவுகிறது.
ரஷ்ய உக்ரெயின் போரின் தாக்கம்

எரிபொருள் மற்றும் எரிவாயுக்காக ரஷ்யாவிலேயே ஐரோப்பிய நாடுகள் பெரிதும் தங்கியிருக்கிறது. ரஷ்ய எரிசத்தியில் தங்கியிருப்பதை குறைக்குமாறு மேற்குலக நாடுகள் கோரிவருகின்ற நிலையிலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் நிலை தொடர்கிறது.

எரிவாயு விநியோகத்தை குறைப்பதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுப்பதால் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலை ஏற்படும். உரவகைகள், உணவு வகைகள் மற்றும் எரிசத்தி ஆகியவற்றுக்கான தட்டுப்பாட்டினால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பாதிப்படைகிறது”, எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here