பிந்திய செய்திகள்

இலங்கைக்கு கை கொடுக்கும் ஜி-7 நாடுகள்!

இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன. உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது.

அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான உதவிகளை வழங்க ஜி-7 நாடுகள் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்கிய செல்வந்த நாடுகள், கடன் நிவாரணத்தை வழங்க வலியுறுத்தப்படுவதுடன், பெரு நன்கொடை அமைப்பான ‘பரிஸ்க்லப்’ ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கவும் ஜி-7 நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts