பிந்திய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கருத்து தெரிவிக்கையில் உக்ரைன் ரஷ்யாவின் தாக்குதல்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது ரஷ்யாவின் தாக்குதல்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என உளவுத்துறை வெளியிட்டுள்ளதாக கூறப்படும் செய்தி குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பொறிஸ் ஜோன்சன், ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் என்பது யதார்த்தமான சாத்தியம் எனக் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு பாரிய இராணுவம் உள்ளதாகவும், பேரழிவு தரும் தவறை செய்துள்ளதால், அவர் மிகவும் கடினமான அரசியல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை வீழ்த்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் தொலைதூர எறிகணைகளை பயன்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் விடயத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு நரேந்திர மோடியை கோரினீர்களா? எனவும் ஊடகவியலாளர்கள் பொறிஸ் ஜோன்சனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய படைகள் பொதுமக்கள் மீது அட்டூழியங்களை நடத்தியமை தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி, வலுவான மொழியில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பல தடவைகள் உக்ரைன் விடயத்தில் நரேந்திர மோடி தலையிட்டுள்ளார் எனவும், இந்தியா அமைதியையே விரும்புகின்றது எனவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியே வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டுடன் தாமும் இணங்குவதாகவும் பிரித்தானியப் பிரதமர் கூறியுள்ளார்.

ரஷ்ய படைகளை எதிர்ப்பதில் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியும் உக்ரைன் மக்களும் அசாதாரண மன உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விளாட்டிமீர் புடினின் படைகள் மேற்கொள்ளும் கடுமையான தாக்குதல்களை பிரித்தானியாவும் அதன் நட்பு நாடுகளும் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது எனவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts