பிந்திய செய்திகள்

மேலும் 3 நாடுகளில் உறுதி செய்யப்பட்ட குரங்கம்மை தொற்று

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் புதியதாக குரங்கம்மை தொற்று நோயாளர்கள் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.

ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் ஏற்கனவே குரங்கம்மை தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக தொடர் காய்ச்சல் மற்றும் சொறி ஆகியன உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

குரங்கம்மை மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் மிகவும் பொதுவாக பரவும் வைரஸாகும். இந்த வைரஸ் மக்களிடையே எளிதில் பரவாது அத்துடன், அதன் பாதிப்புகளும் லேசானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை. ஆனால் பெரியம்மை நோய்க்கு வழங்கப்படும் தடுப்பூசி 85% பாதுகாப்பை வழங்குகிறது. ஏனெனில் இரண்டு வைரஸ்களும் பெரும்பாலும் ஒத்தவை என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குரங்கம்மை நோயாளர் தொகை தினசரி அதிகரித்து வரும் நிலையில் இந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்த உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இதுவரை அவதானிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நெருங்கிய தொடர்புகள் மூலம் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.

இந்த நோயால் ஏற்படும் பாதிப்புக்கள் லேசானவையாகவே உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தல் மற்றும் உரிய மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts