பிந்திய செய்திகள்

கனரக ஆயுதங்களை முதல் முறையாக உக்ரைனுக்கு வழங்கும் நாடு!

ரஷியாவின் தாக்குதலை தடுப்பதற்காக உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் ராணுவ உதவிகள் வழங்கிவருகின்றன. ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஆனால், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் குழப்பம் நிலவியது. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷிய தாக்குதல்களைத் தடுக்க உதவுவதற்காக உக்ரைனுக்கு தனது முதல் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது.

கே.எம்.டபுள்யு. நிறுவனத்திடம் இருந்து கெபார்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். முதற்கட்டமாக 50 பீரங்கிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts