பிந்திய செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய போர் பயிற்சியில் ரஷ்ய வீரர்கள்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவும் வழங்கப்படுகிறது.

ரஷ்ய தாக்குதலால், இரண்டாம் உலக போருக்கு பின்பு 1.3 கோடி பேர் அகதிகளாக வெளியேறியும், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில், போலந்து மற்றும் லித்துவேனியாவுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த பால்டிக் கடல் பகுதியில், அணு ஆற்றலை கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் வரை ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொள்வதில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.

இதற்காக விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உட்கட்டமைப்புகள், ராணுவ சாதனம் மற்றும் முகாம்கள் ஆகியவற்றை போலியாக உருவாக்கி, அவற்றை இலக்குகளாக கொண்டு ஒன்று முதல் பல்வேறு முறை மின்னணு முறையிலான தாக்குதல்களை தொடுத்து பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த பயிற்சியில், ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்திய பின்னர் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொண்டனர். இதேபோன்று கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல்களுக்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக அணு ஆயுத கிடங்குகளை திறக்க வேண்டும் என்று ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களில் கூறப்பட்டு வரும் செய்திகளை நாங்கள் கேட்கிறோம் என ரஷிய செய்தி நிறுவன ஆசிரியர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முரடோவ் (Dmitry Muratov)கூறியுள்ளார்.

இதன் காரணமாம உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு , போரின் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன் படுத்தலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவி வருகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts