பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவன் உயிரிழப்பு !

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் 29 வயதுடைய இசுரு ஜீவந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இலங்கையின் அத்தனகல்ல வல்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார்.இசுறு உயர்தர கணிதப் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி இருந்தார்.

இரண்டு வருடங்கள் அங்கு படித்துவிட்டு, மேற்படிப்புக்காக இசுரு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டார்.அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவர் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இலங்கையின் அத்தனகல்ல வல்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார்.இசுறு உயர்தர கணிதப் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி இருந்தார்.

இரண்டு வருடங்கள் அங்கு படித்துவிட்டு, மேற்படிப்புக்காக இசுரு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டார்.அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவர் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts