பிந்திய செய்திகள்

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு திடீரென சென்ற கோட்டாபய

இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம்
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு, திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நீர், சூரிய சக்தி, காற்று போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களைக் கொண்டு மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பில், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துத் தகவல் தெரிவித்துகொள்ளும் நோக்கிலேயே அவர் சென்றுள்ளார்.

Gallery

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, 2030ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களின் மூலம் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

Gallery

அதேபோன்று, நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டின் மூலம் குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்குள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts